ஊடகவியலாளர், புகைப்பட ஊடகவியலாளர் மற்றும் ஊடக பணியாளர்கள்
- பொதுமக்களுக்காக திறந்திருக்கும் நேரம் - திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை
- முற்கூட்டியே நேரம் ஒதுக்கிக்கொள்ள தேவையில்லை – முதலில் வருபவருக்கு முதலில் சேவை என்ற அடிப்படையில்
- அனைத்து மூல ஆவணங்களும் போட்டோ பிரதிகளுடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்
- கட்டணம் - தூதரகத்தில் காசாக மாத்திரம் செலுத்த வேண்டும்
இந்த வகையின கீழ் விசா வழங்குவதற்கு தூதரகம் இலங்கையிலுள்ள வெளிநாட்டு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது. எனவே விண்ணபப்ங்களை ஆகக் குறைந்தது 2 வாரங்களுக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
ஊடக பணிகளுக்காக இலங்கைக்கு விஜயம்செய்கின்ற ஊடகவியலாளர்கள் சுற்றுலா அல்லது வியாபார விசாவில் இலங்கைக்குள் பிரவேசிக்க முடியாது.
தேவையான ஆவணங்கள்
பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- ஒழுங்காக நிரப்பப்பட்ட ETA வியாபார விசா விண்ணப்பப்படிவம்.
- பயன்படுத்தப்படாத இரண்டு விசா பக்கங்களுடன் கடவுச்சீட்டு (நீங்கள் இலங்கைக்கு வருகைதரும் திகதியிலிருந்து ஆகக் குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியானதாக இருக்க வேண்டும்.
- கடவுச்சீட்டின் பிரதி (தரவு பக்கம் / போட்டோ பக்கம்)
- அண்மையில் எடுத்த இரண்டு புகைப்படங்கள் - கடவுச்சீட்டு அளவு – 6 மாதங்களுக்குள் எடுக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.
- நீங்கள் எதியோப்பியராக இல்லாவிட்டால், செலலுபடியான எதியோப்பியா விசாவைக் காட்ட வேண்டும்.
- இலங்கையில் அனுசரணையளிக்கும் கம்பெனியின் கடிதம்
- கடிதங்கள் நிறுவனத்தின்/ கம்பெனியின் கடித தலைப்புடன் தூதரகத்தின் விசா பிரிவுக்கு முகவரியிட்டு அனுப்பப்படுதல் வேண்டும்.
- இலங்கைக்கு விஜயம் செய்கின்ற ஊடகவியலாளர்களின் பெயர் மற்றும் கடவுச்சீட்டு விபரங்கள் என்பவற்றுடன் திட்டமிடப்பட்ட திரைப்படத்தின் கதைச்சுருக்கம், கால வரையறை, அமைவிடங்கள் ஆகிய
- விபரங்களுடன் தூதரகத்திற்கு ஒரு விண்ணப்ப கடிதம்
- இலங்கை தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் அங்கீகாரம். இணையத்தளம்: www.nfc.gov.lk
- ஊடக உபகரணங்களை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான சுங்க அனுமதி
- வனவிலங்கு பாதுகாப்பு பிரதேசங்களில் திரைப்படம் எடுப்பதற்கு, காடு பேணல் திணைக்களத்தின் அனுமதியைப் பெற வேண்டும். இணையத்தளம்: www.dwc.gov.lk
- தகுந்த விசா கட்டணம்