சமூக ஊடக ஊட்டம்

  • பொதுமக்களுக்காக திறந்திருக்கும் நேரம் - திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை
  • முற்கூட்டியே நேரம் ஒதுக்கிக்கொள்ள தேவையில்லை – முதலில் வருபவருக்கு முதலில் சேவை என்ற அடிப்படையில்
  • அனைத்து மூல ஆவணங்களும் போட்டோ பிரதிகளுடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்
  • கட்டணம் - தூதரகத்தில் காசாக மாத்திரம் செலுத்த வேண்டும்

பின்வரும் நோக்கங்களில் ஏதாவது ஒன்றுக்காக பயணம் செய்வதாக இருந்தால் நீங்கள் வியாபார விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்:

  • மகாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகள்
  • கலை, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுதல்
  • வியாபார கூட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் என்பவற்றில் கலந்துகொள்ளுதல்
  • சமய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுதல்
  • கருத்தரங்குகளில் கலந்துகொள்ளுதல்
  • குறுகிய கால பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்

இலங்கையில் தங்கியிருக்கும் காலம் 30 நாட்களுக்குக் குறைவாக இருந்தால், விண்ணப்பதாரி அல்லது அவர் சார்பில் மூன்றாம் தரப்பு இணையவழியாக ETA இணையத்தளத்தில் www.eta.gov.lk விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலம் 30 நாட்களுக்கு மேற்பட்டால் விண்ணப்பதாரர் தூதரகத்தின் ஊடாக விசா பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது இலங்கையில் தங்கியிருக்கும்போது கால நீடிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

தூதரகத்தின் ஊடாக விசா பெற்றுக்கொள்ளுவதற்கு பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.