சமூக ஊடக ஊட்டம்

  • பொதுமக்களுக்காக திறந்திருக்கும் நேரம் - திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை
  • முற்கூட்டியே நேரம் ஒதுக்கிக்கொள்ள தேவையில்லை – முதலில் வருபவருக்கு முதலில் சேவை என்ற அடிப்படையில்
  • அனைத்து மூல ஆவணங்களும் போட்டோ பிரதிகளுடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்
  • கட்டணம் - தூதரகத்தில் காசாக மாத்திரம் செலுத்த வேண்டும்

நீங்கள் பின்வரும் எந்த நோக்கங்களுக்காகப் பயணம் செய்தாலும் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்:

  • சுதேச மருத்துவ (மூலிகை) சிகிச்சை உட்பட மருத்துவ சிகிச்சை
  • விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுவதற்காக
  • இயற்கை காட்சிகளைப் பார்த்தல் மற்றும் விடுமுறையைக் கழித்தல்
  • நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கச் செல்லுதல்

இலங்கையில் தங்கியிருக்கும் காலம் 30 நாட்களுக்குக் குறைவாக இருந்தால், விண்ணப்பதாரி அல்லது அவர் சார்பில் மூன்றாம் தரப்பு இணையவழியாக ETA இணையத்தளத்தில் www.eta.gov.lk விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலம் 30 நாட்களுக்கு மேற்பட்டால் விண்ணப்பதாரர் தூதரகத்தின் ஊடாக விசா பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது இலங்கையில் தங்கியிருக்கும்போது கால நீடிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.