இறந்தவர் இலங்கைப் பிரசையாக இருந்தால் பின்வரும் ஆவணங்கள் வெளிநாட்டு அலுவலகத்தினால் சான்றுப்படுத்தப்பட்டு இலங்கை தூதரகத்தினால் சான்றுப்படுத்தப்பட வேண்டும்.
- இறப்புச் சான்றிதழ்
- திடீர் மரண பரிசோதகரின் சான்றிதழ்/ பிரேத பரிசோதனை சான்றிதழ்
- தொற்று நோய் இல்லை என்ற சான்றிதழ்
- எம்பாம் (பிணத்தை வேதியல் முறையில் காப்புச்) செய்யப்பட்ட சான்றிதழ்
- விசா நிலையுடன் தற்போதைய அசல் இலங்கை கடவுச்சீட்டு: வெளிநாட்டு அலுவலக சான்றுப்படுத்தல் அவசியமில்லை
- விமான பயண விபரங்கள்: வெளிநாட்டு அலுவலக சான்றுப்படுத்தல் அவசியமில்லை
இறந்தவர் முன்னாள் இலங்கையாராக இருந்தால் பின்வரும் நடவடிக்கைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அத்துடன் பின்வரும் ஆவணங்கள் வெளிநாட்டு அலுவலகத்தில் சான்றுப்படுத்தப்பட்டு இலங்கை தூதரகத்தினால் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும்.
- இரத்த உறவு - இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளுவதற்கும் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு கொழும்பில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் அனுமதி பெறுவதற்கும் பிரதிநிதி ஒருவரை பெயர்க் குறித்து நியமித்தல்.
- இரத்த உறவுள்ளவரின் சம்மதக் கடிதம்.
- விமான பயண விபரம்.
- இறந்த நபருடைய தற்போதைய பிரசாவுரிமையுள்ள நாட்டின் அனுமதி: வெளிநாட்டு அலுவலக சான்றுப்படுத்தல் பொருத்தமானது.
- இரத்துச்செய்யப்பட்ட தற்போதைய கடவுச்சீட்டு: வெளிநாட்டு அலுவலக சான்றுப்படுத்தல் பொருத்தமானது.
- Death Certificate: Foreign Office certification is applicable.
- திடீர் மரண பரிசோதகரின் சான்றிதழ்/ பிரேத பரிசோதனை சான்றிதழ்: வெளிநாட்டு அலுவலக சான்றுப்படுத்தல் பொருத்தமானது.
- எம்பாம் செய்யப்பட்ட சான்றிதழ்: வெளிநாட்டு அலுவலக சான்றுப்படுத்தல் பொருத்தமானது.
- கட்டணம் - இலங்கை பிரஜை - US$ 30 ஒவ்வொரு ஆவணத்திற்கு
- வெளிநாட்டு பிரசை பிரஜை - US$ 33 ஒவ்வொரு ஆவணத்திற்கு
தகனம் செய்து மிஞ்சியிருப்பது (சாம்பல்)
தகனம் செய்து சாம்பலை இலங்கைக்கு கொண்டு செல்ல விரும்பினால், தயவுசெய்து பின்வரும் ஆவணங்கள் உங்களிடம் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
- உள்ளூர் இறப்புச் சான்றிதழ்
- தகனம் செய்த சான்றிதழ்
- தேவைப்பட்டால் - சாம்பல் வைக்கப்பட்டுள்ள குறித்த தகனம் செய்த மயானத்தின் எற்றுக்கொள்ளல் கடிதம்
தயவுசெய்து கவனிக்கவும்: இறப்பு மற்றும் தகனக்கிரியை சான்றிதழ்கள் வெளிநாட்டு அலுவலகத்திலும் அடிஸ் அபாபாவில் உள்ள இலங்கை தூதரத்தினாலும் சான்றுப்படுத்தப்படல் வேண்டும்.
இதற்கு மேலதிகமாக, நீங்கள் பயணம் செய்கின்ற விமான கம்பெனி மற்றும் விமான நிலையங்கள் என்பவற்றின் தேவைகள் தொடர்பாகவும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
எவ்வாறாயினும், கப்பற் சரக்கில் இருப்பது உண்மையில் சடலம் அல்லது அதன் மிச்சம் என்பதற்கு சுங்கப்பகுதி திருப்தியடைய வேண்டும்.
- கட்டணம் - இலங்கை பிரஜை - US$ 30 ஒவ்வொரு ஆவணத்திற்கு
- வெளிநாட்டு பிரசை பிரஜை - US$ 33 ஒவ்வொரு ஆவணத்திற்கு