சமூக ஊடக ஊட்டம்

"இலங்கையில் திருமணம் செய்துகொள்ளுவதற்கு நீங்கள் எடுத்த தீர்மானத்திற்கு உங்களைப் பாராட்டுகிறோம். இலங்கையில் திருமணம் செய்துகொள்ளுவதற்கு, பினன்வரும் ஆவணங்கள் உங்களிடமிருக்கின்றன என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்"

வெளிநாட்டு பிரசைகள் இலங்கையில் திருமணத்தைப் பதிவுசெய்துகொள்ளுவதற்கான ஆவணங்கள் மிகவும் ஒளிவுமறைவற்றவையாகும். நீங்கள் பின்வரும் ஆவணங்களை திருமணம் நடைபெறவுள்ள இடத்திற்கு உரிய பிரதேச/ மாவட்ட பதிவாளருக்கு சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

  • திருமணம் செய்துகொள்ள விரும்பும் சோடியின் கடவுச்சீட்டுகள்
  • திருமணம் செய்துகொள்ள விரும்பும் சோடியின் பிறப்புச் சான்றிதழ்கள்
  • பின்வரும் ஆவணங்கள் (எதியோப்பியா பிரசைகளுக்காக) வெளிநாட்டு அலுவலகத்தினால் சான்றுப்படுத்தப்பட்ட அடிஸ் அபாபாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் சட்டபூர்வமானதாக்கப்பட வேண்டும்:-
    • தனியாள் - விவாகம் செய்யாதவர் என்ற சான்றிதழ்/கள்
    • விவாரத்தானவர்கள் – விவாகரத்து சான்றிதழ் மற்றும் விவாகம் செய்ய முடியும் என்ற சான்றிதழ்/கள்
    • விதவையாக இருந்தால் - காலஞ்சென்ற துணைவரின் இறப்புச் சான்றிதழ், உங்களுடைய முன்னைய விவாக சான்றிதழ் மற்றும் விவாகம் செய்ய முடியும் என்ற சான்றிதழ்
    • நீங்கள் பெயரை மாற்றியிருந்தால், ஓர் உறுதி வாக்கு. (விவாகரத்து பெற்றவர்கள் மீண்டும் கன்னிப் பெயருக்கு மாறியிருந்தால் அவை உட்பட)
  • விவாகம் செய்துகொள்ளவில்லை என்ற சான்றிதழ்/ விவாகம் செய்துகொள்ள முடியும் என்ற சான்றிதழ்:- நீங்கள் யார், உங்களுடைய தற்போதைய நிலை என்ன (விவாகம் செய்துகொள்ளவில்லை/ விவாகம் செய்துகொள்ள முடியும்) என்பதை உறுதிப்படுத்துவதற்கு சட்ட ஆலோசகரால் சான்றுப்படுத்தப்பட்ட ஒரு சத்தியக்கடதாசி/ நியதிச்சட்ட பிரகடனம். வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்த காலத்திற்கு அந்தந்த நாடுகளில் வெளிநாட்டு அலுவலகத்தினால் சான்றுப்படுத்தப்பட்ட/ சட்டபூர்வமாக்கப்பட்ட சத்தியகடதாசிகள் மற்றும் அந்த நாடுகள் இணைக்கப்பட்டுள்ள இலங்கை தூதரகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டவை.
  • எதியோப்பியாவில் வாழ்கின்ற ஏனைய பிரசைகளுக்கு, ஆவணங்கள் அவர்களின் குறித்த தூதரகத்தினால் சான்றுப்படுத்தப்பட வேண்டும்.
  • இலங்கைக்குப் பிரயாணம் செய்வதற்கு செல்லுபடியான விசா.

அதற்கு மேலதிகமாக திருமணம் செய்துகொள்ளுவதற்கு இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு சுற்றுலா பயண விசா பெற்றுக்கொள்ள வேண்டும்.