தூதரகத்தில்/ இலங்கையில் (வெளிநாட்டு பிரசைகள்) விவாகத்தைப் பதிவுசெய்வதற்குத் தேவைப்படும் சட்ட ஆவணங்கள்.
திருமணம் செய்து கொள்ளும் ஒரு தரப்பு இலங்கைப் பிரசையாக இருக்க வேண்டும். அத்துடன் தூதரகத்திற்கு திருமண முன்னறிவிப்பைக் கொடுக்க வேண்டும். (தூதரகத்தில் படிவங்கள் இருக்கின்றன).
தேவையான ஆவணங்கள்
- இரு தரப்பினரும் தற்போதைய விசாவுடன் செல்லுபடியான கடவுச்சீட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும்
- இரு தரப்பினருடைய பிறப்புச் சான்றிதழ்களின் மூலப்பிரதிகள் ஆங்கில மொழிபெயர்ப்புடன்
- இரண்டு (2) சாட்சிகள் - அவர்கள் வரும்போது செல்லுபடியான விசா மற்றும் செல்லுபடியான கடவுச்சீட்டுகளுடன் இலங்கைப் பிரசைகளாக இருக்க வேண்டும். சாட்சிகள் இரு தரப்பினரையும் அறிந்தவராக இருக்க வேண்டும்
- இரு தரப்பினரும் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்
- தனியாள் - விவாகம் செய்யாதவர் என்ற சான்றிதழ்/கள்
- விவாகரத்தானவர்கள் – விவாகரத்து சான்றிதழ் மற்றும் விவாகம் செய்ய முடியும் என்ற சான்றிதழ்/கள்
- விதவையாக இருந்தால் - காலஞ்சென்ற துணைவரின் இறப்புச் சான்றிதழ், உங்களுடைய முன்னைய விவாக சான்றிதழ் மற்றும் விவாகம் செய்ய முடியும் என்ற சான்றிதழ்
- நீங்கள் பெயரை மாற்றியிருந்தால், ஓர் உறுதி வாக்கு. (விவாகரத்து பெற்றவர்கள் மீண்டும் கன்னிப் பெயருக்கு மாறியிருந்தால் அவை உட்பட)
- விவாகம் செய்துகொள்ளவில்லை என்ற சான்றிதழ்/ விவாகம் செய்துகொள்ள முடியும் என்ற சான்றிதழ்:- நீங்கள் யார், உங்களுடைய தற்போதைய நிலை என்ன (விவாகம் செய்துகொள்ளவில்லை/ விவாகம் செய்துகொள்ள முடியும்) என்பதை உறுதிப்படுத்துவதற்கு சட்ட ஆலோசகரால் சான்றுப்படுத்தப்பட்ட ஒரு சத்தியக்கடதாசி/ நியதிச்சட்;ட பிரகடனம். வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்த காலத்திற்கு அந்தந்த நாடுகளில் வெளிநாட்டு அலுவலகத்தினால் சான்றுப்படுத்தப்பட்ட/ சட்டபூர்வமாக்கப்பட்ட சத்தியகடதாசிகள் மற்றும் அந்த நாடுகள் இணைக்கப்பட்டுள்ள இலங்கை தூதரகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டவை.
- இலங்கை பிரசைகள் இலங்கையில் வாழ்ந்த காலத்திற்கான திருமணமாகவில்லை என்ற சான்றிதழை கொழும்பில் உள்ள வெளிநாட்டமைச்சு உறுதிப்படுத்த வேண்டும்.
- இலங்கை பிரசைகளின் திருமணமாகவில்லை என்ற சான்றிதழை எதியோப்பியாவில் உள்ள குறித்த தூதரங்கள் மற்றும் அடிஸ் அபாபாவில் உள்ள சட்டபூர்வமான இலங்கைத் தூதரகம் என்பவை உறுதிப்படுத்த வேண்டும்.
- வதிவிட தேவைகள் - திருமண முன்னறிவித்தல் கொடுக்கப்பட்ட திகதியிலிருந்து பத்து (10) நாட்கள் அல்லது அதற்கு மேல் இரு தரப்பினரும் எதியோப்பியாவில் வசித்திருக்க வேண்டும்.
நடவடிக்கைமுறை
- விவாகத்திற்கு முன்னறிவித்தல்:- திருமண முன்னறிவித்தல் படிவம் தூதரக அதிகாரியின் முன்னிலையில் நிரப்பப்பட வேண்டும். அத்துடன், இரண்டு (2) சாட்சிகள் தூதரகத்திற்கு சமூகமளித்து கையொப்பமிட வேண்டும்.
- விவாக பதிவு:- பன்னிரண்டு (12) வேலை நாட்களுக்கு பின்னரும் மூன்று (3) மாதங்களுக்கு முன்னரும் எந்த நேரத்திலும் தூதரக வளாகத்திற்கு முன்னறிவித்தல் கொடுத்து விவாக பதிவை மேற்கொள்ள முடியும்.