இலங்கைக்கு வெளியே நிகழ்ந்துள்ள பிறப்பை பதிவுசெய்தல்
நீண்ட நடவடிக்கைமுறை காரணமாக விண்ணப்பதாரர்கள் இயலுமானளவு முன்னதாகவே வரும்படி அறிவுறுத்தப்படுகிறது.
- பொதுமக்களுக்காக திறந்திருக்கும் நேரம் - திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை
- அனைத்து மூல ஆவணங்களும் போட்டோ பிரதிகளுடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்
கட்டணங்கள் | : | தூதரகத்தில் காசாக செலுத்துதல் அல்லது வங்கி வைப்பு |
வங்கி விபரங்கள் | : | Embassy of Sri Lanka, Commercial Bank of Ethiopia, Foreign Transfers & NR NT Accounts Branch, Birr A/C No: 1000 18365 9271 or USD A/C No: 1000 18365 9174 (SWIFT: CBETETAA) |
தேவையான ஆவணங்கள்
இலங்கை பிரசாவுரிமை சட்டத்தின் 5(2)வது பிரிவின் கீழ் பிள்ளையின் பிறப்பை பதிவுசெய்வதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் கீழே தரப்பட்டுள்ள பொருத்தமான விண்ணப்பத்தை ஆங்கில பெரிய எழுத்தில் பூர்த்திசெய்து தூதரகத்திற்குச் சமர்ப்பிப்பதற்கு விண்ணப்பதாரருக்கு (பிள்ளை பிறப்பு நிகழ்கின்றபோது பிள்ளையின் தாய் அல்லது தந்தை, அல்லது இருவரும் இலங்கைப் பிரசையாக இருக்க வேண்டும்) இங்கே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
- பிள்ளைக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கின்றபோது விண்ணப்ப திகதியிலிருந்து பிள்ளையின் வயது 03 மாதங்களுக்கு குறைவாக இருத்தல்.
- பிள்ளைக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கின்றபோது விண்ணப்ப திகதியிலிருந்து பிள்ளையின் வயது 03 - 12 மாதங்களுக்கு இடையில் இருத்தல்.
விண்ணப்பதாரர் விண்ணப்பத்திலும் பிரகடனத்திலும் தூதரகத்தில் சிரேஷ்ட உத்தியோகத்தர் முன்னிலையில் கையொப்பமிட வேண்டும்.
பின்வரும் ஒழுங்கில் கீழுள்ள துணை ஆவணங்களின் மூலப் பிரதிகளை அவற்றின் ஒரு தொகுதி போட்டோ பிரதிகளுடன் சமர்ப்பிக்க வேண்டும். (போட்டோ பிரதிகளும் மூலப் பிரதிகளும் வௌ;வேறாகச் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.)
- பிள்ளையின் அசல் எதியோப்பிய / ஜிபூடி / சோமாலிய / தென் சூடான் பிறப்புச் சான்றிதழ் (பெற்றோரின் விபரங்களுடன்) குறித்த வெளிநாட்டு அமைச்சினால் சான்றுப்படுத்தப்பட்டது.
- தந்தையின் அசல் பிறப்புச் சான்றிதழ் **
- தாயின் அசல் பிறப்புச் சான்றிதழ் **
- பெற்றோரின் அசல் விவாக சான்றிதழ் **
- பிள்ளை பிறப்பு நிகழ்ந்த போது தந்தையின் மற்றும் தாயின் கடவுச்சீட்டுகள்
- தரவு பக்கம் (போட்டோ பக்கம்)
- திருத்தப்பட்ட பக்கம்
- விசா பக்கம்
- தந்தையின் மற்றும் தாயின் தற்போதைய கடவுச்சீட்டுகள்
- தரவு பக்கம் (போட்டோ பக்கம்)
- திருத்தப்பட்ட பக்கம்
- விசா பக்கம்
- அசல் பிறப்புச் சான்றிதழ்கள்/ விவாக சான்றிதழ்கள் இலங்கையில் வழங்கப்பட்டிருந்தால் ஆங்கில மொழிபெயர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
- பிறப்புச் சான்றிதழ்கள்Æவிவாக சான்றிதழ்கள் இலங்கையைத் தவிர்த்து ஏனைய நாடுகளில் வழங்கப்பட்டிருந்தால் சான்றிதழின் மூலப்பிரதி / அதன் ஆங்கில மொழிபெர்ப்பை (சான்றிதழின் மூலப் பிரதி ஆங்கிலத்தில் இல்லாவிட்டால்) மூல சான்றிதழை வழங்கிய நாடு இணைக்கப்பட்ட எதியோப்பியாவில் அல்லது இலங்கையில் தகுந்த தூதுவர் அலுவலகத்தினால் உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும்.
பொருத்தமானதாக இருந்தால் விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் எனக் கேட்கப்படுகின்றது.
- பிள்ளையின் பிறப்பு நிகழும் சமயத்தில் விண்ணப்பதாரி இரட்டைப் பிரசாவுரிமை பெற்றவராக இருந்தால் இரட்டைப் பிரசாவுரிமை சான்றிதழின் மூலப்பிரதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- பிள்ளையின் பிறப்பு நிகழும் சமயத்தில் பெற்றோர் விவாகம் செய்திருக்காவிட்டால் தந்தைவழி மரபைக் குறிக்கும் சத்திய கடதாசியும் பிரசாவுரிமை பிரகடனமும் சட்ட ஆலோசகரால் சான்றுப்படுத்தப்பட்டு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
விண்ணப்பதாரர் நேரடியாக இந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் தூதரகத்தில் ஒரு நேர்காணலுக்கு முகம்கொடுக்க வேண்டும்.
கட்டணங்கள் - கொன்சுலர் பிறப்புச் சான்றிதழுக்கும் பிள்ளையின் பிறப்பு நிகழ்ந்து ஒரு வருடத்துக்குள் பிரசாவுரிமை சட்டத்தின் கீழ் பிறப்பை பதிவதற்கும் - US$ 25
காசாக அல்லது வங்கி வைப்பாக பணம் செலுத்தப்பட வேண்டும்.