தற்காலிக /அவசர கடவுச்சீட்டுகள் - இயந்திரத்தில் வாசிக்கப்படாத கடவுச்சீட்டுகள் (NMRP)
- பொதுமக்களுக்காக திறந்திருக்கும் நேரம் - திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை
- அனைத்து மூல ஆவணங்களும் போட்டோ பிரதிகளுடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்
கட்டணங்கள் | : | தூதரகத்தில் காசாக செலுத்துதல் அல்லது வங்கி வைப்பு |
வங்கி விபரங்கள் | : | Embassy of Sri Lanka, Commercial Bank of Ethiopia, Foreign Transfers & NR NT Accounts Branch, Birr A/C No: 1000 18365 9271 or USD A/C No: 1000 18365 9174 (SWIFT: CBETETAA) |
பின்வரும் சந்தர்ப்பங்களில் அவசரமாக இலங்கைக்கு திரும்பக்கூடிய வகையில் இலங்கை பிரசைகளுக்கு வழங்கப்படும் அவசர பிரயாண ஆவணம் மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும்.
- மூல கடவுச்சீட்டு காணாமற் போயுள்ளது/ சேதமடைந்துள்ளது/ களவாடப்பட்டுள்ளது
- மூல கடவுச்சீட்டு கலாவதியாகியுள்ளது
- கடவுச்சீட்டு அல்லது பிரயாண ஆவணம் இல்லாத ஒருவர் இலங்கைக்கு செல்ல விரும்புதல்
தற்காலிக பிரயாண ஆவணங்கள் வழங்கிய திகதியிலிருந்து 03 மாதங்களுக்கு செல்லுபடியாகும். இது இலங்கைக்குத் திரும்பும் ஒரே நோக்கத்திற்காக வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்களுக்கு NMRP கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வேறு நாடுகளுக்குப் பயணம் செய்ய அல்லது எதியோப்பியாவில் மேலும் தங்கியிருக்க விசா பெற முடியாது.
தற்காலிக/ அவசர பிரயாண ஆவணத்தைப் பெற்றுக்கொள்ள ஒரு நேர்காணலில் கலந்துகொள்ளுவதற்காக தூதரகத்தின் கொன்சுலர் பிரிவிக்கு நேரடியாக வரும்படி விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேவையான ஆவணங்கள்
- அவசர பிரயாண ஆவணத்தைக் கோரும் கடிதம்
- ஒழுங்காகப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பம் (IE 35)
- முறைப்பாட்டு படிவம் (கடவுச்சீட்டு காணாமற் போயிருந்தால்)
- காலாவதியான கடவுச்சீட்டு அல்லது காணாமற் போன கடவுச்சீட்டின் பிரதி காணாமற் போயிருந்தால்)
- பிறப்புச் சான்றிதழ் மூலப்பிரதி
- பொலிஸ் அறிக்கை (கடவுச்சீட்டு காணாமற் போயிருந்தால்)
- பிரசாவுரிமை சட்டத்தின் (5(2) அல்லது 17ஆம் பிரிவின்) கீழ் வழங்கப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பிரசாவுரிமை சான்றிதழ். (விண்ணப்பதாரர் இலங்கைக்கு வெளியே பிறந்திருந்தால் அல்லது பதிவு பிரஜையாக இருந்தால்)
- பயண விபரம்/ விமான அனுமதிச்சீட்டு (14 நாட்கள் முன்னோக்கியது)
பரிந்துரைக்கப்பட்ட கட்டணம்
- விண்ணப்பதாரி முன்னைய பிரயாண ஆவணத்தைச் சமர்ப்பித்திருந்தால் – US$ 54
- முன்னைய பிரயாண ஆவணம் காணாமற்போயிருந்தால் - US$ 169
விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்வதற்கான அறிவுறுத்தல்கள்
- விண்ணப்பம் ஆங்கிலத்தில் பெரிய எழுத்துக்களில் நிரப்பப்பட வேண்டும்.
- முழு முகமும் இரண்டு காதுகளும் நெற்றியும் தெரியும் வகையில் கடந்த 03 மாதங்களுக்குள் எடுத்த வெள்ளை பின்னணி கொண்ட ஒரேமாதிரியான நான்கு (04) (Size - 3.5cm x 4.5cm) வர்ண புகைப்படங்கள் இணைக்கப்படுதல் வேண்டும். புகைப்படங்கள் தொப்பி, தலைக் கவசம், அல்லது கண்ணாடிகள்; இன்றி இருக்க வேண்டும்.
- புகைப்படத்திற்கு நேர் கீழுள்ள கூடுகளுக்குள் விண்ணப்பதாரர் கையொப்பமிட வேண்டும்.
குறிப்புகள்:
- பிரசாவுரிமை நிலை சம்பந்தமாக தவறான பிரகடனத்துடன் சேர்த்து போலி சான்றிதழ்களை அல்லது ஏனைய போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தல் குற்றமாகும். அத்தகைய விடயங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும்.
- எந்தச் சூழ்நிலையிலும் கட்டணம் மீளச் செலுத்தப்பட மாட்டாது.
- பூரணமற்ற விண்ணப்பங்கள் திருப்பி அனுப்பப்படும், கொன்சுலர் கட்டணம் மீளச் செலுத்தப்பட மாட்டாது.