காணாமற் போனதாக / சேதமடைந்ததாக அறிவிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளுக்கு/ ஆவணங்களுக்கு மாற்று கடவுச்சீட்டுகளை வழங்குதல்
- பொதுமக்களுக்காக திறந்திருக்கும் நேரம் - திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை
- காணாமற்போன கடவுச்சீட்டுகளுக்கான மாற்று கடவுச்சீட்டுகளுக்கு தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பதாரர் விண்ணப்பத்துடனும் தேவைப்படும் மூல ஆவணங்களுடனும் நேரடியாக சமூகமளித்து ஒரு நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.
- அனைத்து மூல ஆவணங்களும் போட்டோ பிரதிகளுடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
கட்டணங்கள் | : | கொடுப்பனவு முறை - தூதரகத்தில் காசாக செலுத்துதல் அல்லது வங்கி வைப்பு |
வங்கி விபரங்கள் | : |
Embassy of Sri Lanka, Commercial Bank of Ethiopia, Foreign Transfers & NR NT Accounts Branch, Birr A/C No: 1000 18365 9271 or USD A/C No: 1000 18365 9174 (SWIFT: CBETETAA) புதிய கடவுச்சீட்டு வழங்கல் (தற்போதைய கடவுச்சீட்டு காணாமற் போனதாக அல்லது சேதமடைந்ததாக அறிவித்தால்) |
கடவுச்சீட்டு காணாமற் போயிருந்தால் அல்லது களவாடப்பட்டிருந்தால், உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து பொலிஸ் அறிக்கையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
ஒழுங்காகப் பூர்த்திசெய்யப்பட்ட IE35 மற்றும் காணாமற் போனதற்கான விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். (மூல ஆவணங்களுடன் ஒவ்வொரு ஆவணத்தின் 01 தொகுதி போட்டோ பிரதிகளுடன்)
- பிறப்புச் சான்றிதழ் மூலப்பிரதி. (மொழிபெயர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது)
- விண்ணப்பதாரர் இலங்கைக்கு வெளியே பிறந்திருந்தால் அல்லது பதிவு பிரஜையாக இருந்தால் பிரசாவுரிமை சட்டத்தின் (5(2) அல்லது 17ஆம் பிரிவின்) கீழ் வழங்கப்பட்ட பிரசாவுரிமை சான்றிதழ்.
- எதியோப்பியாவில் தங்கியிருப்;பதற்கு தற்போதைய விசா.
- தொழில் திறனுள்ளவர்களுக்கு பொருத்தமான கல்வி/ தொழில் திறன் சான்றிதழ் தேவைப்படும். அத்துடன் ஏனைய திறனுள்ளவர்களுக்கு தொழில் தருநரிடமிருந்து பெற்ற பதவி குறிப்பிடப்பட்ட கடிதம் தேவைப்படும்.
- விண்ணப்பதாரர் திருமணமானவராக இருந்தால் கடவுச்சீட்டில் கணவனின் முதற்பெயரை சேர்க்க விரும்பினால் விவாக சான்றிதழ்.
- கடைசி கடவுச்சீட்டின் பிரதிகள் (இருப்பின்)
- இலங்கை தேசிய அடையாள அட்டை, இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம் பிரதிகள் (இருப்பின்)
- 16 வயதுக்குக் குறைந்த பிள்ளையை பெற்றோர்களில் ஒருவரின் கடவுச்சீட்டில் சேர்ப்பதற்கு மேலதிகமாக பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்.
- ஒழுங்காக நிரப்பி சான்றுப்படுத்தப்பட்ட (04) புகைப்படங்களுடன் IM35C படிவம்
- பெற்றோர்களிடமிருந்து எதிர்ப்பில்லை என்ற கடிதம்
- பெற்றோர்களின் கடவுச்சீட்டுகளும் பெற்றோரின் விசாவும். (தரவு பக்கம், மாற்றம்/ அவதானிப்பு பக்கங்கள், மற்றும் பிள்ளையை சேர்க்கும் பக்கம் என்பவற்றின் பிரதிகள்)
- பெற்றோர்களின் விவாக சான்றிதழ்
- விண்ணப்பதாரர் 16 வயதுக்குக் குறைந்த பிள்ளையாக இருந்தால், மேலதிகமாக பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்.
- தாய் தந்தை இருவரிடமிருந்தும் சம்மதக் கடிதம்
- பெற்றோர்களின் தற்போதைய கடவுச்சீட்டுக்களின் பிரதிகள் (தரவு பக்கம், அவதானிப்பு/ மாற்றம் செய்யப்பட்ட பக்கங்கள் மற்றும் பிள்ளையின் பெயர் சேர்க்கப்பட்டுள்ள பக்கங்கள்)
- எதியோப்பியாவில் தற்போதைய விசா
- பெற்றோர்களின் விவாக சான்றிதழ் (பெற்றோர் விவாகம் செய்திருந்தால்)
- ஏனைய பொருத்தமான ஆவணங்கள். (பெற்றோர் விவாகரத்து செய்திருந்தால் நீதிமன்றத்தின் தீர்ப்பு, பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரும் மரணமடைந்திருந்தால் இறப்புச் சான்றிதழ், பராயமடையாதவரின் சட்டபூர்வமான பாதுகாவலர்/ பாதுகாப்பு தொடர்பில் ஆவண சாட்சியம்)
- பொலிஸ் அறிக்கை (காணாமற் போன கடவுச்சீட்டு செல்லுபடியானதாக இருந்தால்)
கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான பொது தகவல்கள்
பரிந்துரைக்கப்பட்ட கட்டணம்
- கடவுச்சீட்டின் தரவு பக்கத்தின் பிரதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் – US$ 373
- கடவுச்சீட்டின் தரவு பக்கத்தின் பிரதி சமர்ப்பிக்கப்படாவிட்டால் – US$ 473
கொடுப்பனவு விபரங்கள்
கட்டணங்கள் | : | கொடுப்பனவு முறை - தூதரகத்தில் காசாக செலுத்துதல் அல்லது வங்கி வைப்பு |
வங்கி விபரங்கள் | : |
Embassy of Sri Lanka, Commercial Bank of Ethiopia, Foreign Transfers & NR NT Accounts Branch, Birr A/C No: 1000 18365 9271 or USD A/C No: 1000 18365 9174 (SWIFT: CBETETAA) தனிப்பட்ட காசோலைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை தயவுசெய்து அவதானிக்கவும். |
விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்வதற்கான அறிவுறுத்தல்கள்
- விண்ணப்பம் ஆங்கிலத்தில் பெரிய எழுத்துக்களில் நிரப்பப்பட வேண்டும்
- முழு முகமும் இரண்டு காதுகளும் நெற்றியும் தெரியும் வகையில் கடந்த 03 மாதங்களுக்குள் எடுத்த வெள்ளை பின்னணி கொண்ட ஒரேமாதிரியான நான்கு (04) (Size – 3.5cm x 4.5cm) வர்ண புகைப்படங்கள் இணைக்கப்படுதல் வேண்டும். புகைப்படங்கள் தொப்பி, தலைக் கவசம், கண்ணாடிகள் அல்லது ஏனைய முகக் கவசம் இன்றி இருக்க வேண்டும்.
- புகைப்படத்திற்கு நேர் கீழுள்ள கூடுகளுக்குள் கையொப்பமிட வேண்டும்
குறிப்புகள்:
- பிரசாவுரிமை நிலை சம்பந்தமாக தவறான பிரகடனத்துடன் சேர்த்து போலி சான்றிதழ்களை அல்லது ஏனைய போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தல் குற்றமாகும். அத்தகைய விடயங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும்.
- எந்தச் சூழ்நிலையிலும் கட்டணம் மீளச் செலுத்தப்பட மாட்டாது.
- பூரணமற்ற விண்ணப்பங்கள் திருப்பி அனுப்பப்படும், கொன்சுலர் கட்டணம் மீளச் செலுத்தப்பட மாட்டாது.