தற்போதைய/ காலாவதியான கடவுச்சீட்டுக்கு மாற்று புதிய கடவுச்சீட்டை வழங்குதல்
வம்சாவளியாக அல்லது பதிவின் மூலம் இலங்கைப் பிரஜையானவர்கள் இலங்கை கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். சாதாரண கடவுச்சீட்டு புறக்குறிப்பு இடப்படாவிட்டால் வழங்கப்பட்ட திகதியிலிருந்து 10 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். வழங்கப்பட்ட திகதியிலிருந்து 10 வருடங்கள் முடிந்ததன் பின்னர், அல்லது விசா புறக்குறிப்பு இடுவதற்கு பக்கங்கள் இல்லாவிட்டால் புதிய கடவுச்சீட்டு ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட K (IE35 A) விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். (ஒவ்வொரு ஆவணத்தின் போட்டோ பிரதியுடன் 01 தொகுதியும் மூலப்பிரதிகளும்)
- தற்போதைய/ மிக அண்மித்த கடவுச்சீட்டு. (தரவு/ போட்டோ பக்கம் மற்றும் அவதானிப்பு/ மாற்றம் செய்யப்பட்ட பக்கம்)
- எதியோப்பியாவில் தற்போதைய விசா
- பிறப்புச் சான்றிதழ் மூலப்பிரதி. (மொழிபெயர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது)
- விண்ணப்பதாரர் இலங்கைக்கு வெளியே பிறந்திருந்தால் அல்லது பதிவு பிரஜையாக இருந்தால் பிரசாவுரிமை சட்டத்தின் (5(2) அல்லது 17ஆம் பிரிவின்) கீழ் வழங்கப்பட்ட பிரசாவுரிமை சான்றிதழ்
- தொழில் திறனுள்ளவர்களுக்கு பொருத்தமான கல்வி/ தொழில் திறன் சான்றிதழ் தேவைப்படும். அத்துடன் ஏனைய திறனுள்ளவர்களுக்கு தொழில் தருநரிடமிருந்து பெற்ற பதவி குறிப்பிடப்பட்ட கடிதம் தேவைப்படும். (கடவுச்சீட்டடில் உத்தியோகம்/ தொழில்/ வேலை என்பவற்றைச் சேர்ப்பது கட்டாயமில்லை. அது விருப்புக்குரியது என்பதை தயவுசெய்து அவதானிக்கவும்.)
- விண்ணப்பதாரர் திருமணமானவராக இருந்தால் கடவுச்சீட்டில் (கன்னிப் பெயரிலிருந்து) கணவனின் முதற்பெயரை சேர்க்க/ மாற்ற விரும்பினால் விவாக சான்றிதழ்
- இலங்கை தேசிய அடையாள அட்டை, இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம். (இருப்பின்)
- விண்ணப்பதாரர் 16 வயதுக்குக் குறைந்த பிள்ளையாக இருந்தால், மேலதிகமாக பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்.
- தாய் தந்தை இருவரிடமிருந்தும் சம்மதக் கடிதம்
- பெற்றோர்களின் தற்போதைய கடவுச்சீட்டுக்களின் பிரதிகள் (தரவு பக்கம், அவதானிப்பு/ மாற்றம் செய்யப்பட்ட பக்கங்கள் மற்றும் பிள்ளையின் பெயர் சேர்க்கப்பட்டுள்ள பக்கங்கள்)
- எதியோப்பியாவில் தற்போதைய விசா
- பெற்றோர்களின் விவாக சான்றிதழ் (பெற்றோர் விவாகம் செய்திருந்தால்)
- ஏனைய பொருத்தமான ஆவணங்கள். (பெற்றோர் விவாகரத்து செய்திருந்தால் நீதிமன்றத்தின் தீர்ப்பு, பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரும் மரணமடைந்திருந்தால் இறப்புச் சான்றிதழ், பராயமடையாதவரின் சட்டபூர்வமான பாதுகாவலர்/ பாதுகாப்பு தொடர்பில் ஆவண சாட்சியம்)
கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான பொது தகவல்கள்
பரிந்துரைக்கப்பட்ட கட்டணம் | : | US$ 158.00 + கூரியர் கட்டணம் [DHL] (பொருத்தமாக இருப்பின்) |
கொடுப்பனவு விபரங்கள் | : |
கொடுப்பனவு முறை - காசு அல்லது வங்கி வைப்பு மாத்திரம் (வங்கி வைப்புகள் இலங்கை தூதரகத்தின் பெயரில் எழுதப்பட வேண்டும், Birr A/C No: 1000 18365 9271 or USD A/C No: 1000183659174, Foreign Transfers & NR NT Accounts, Commercial Bank of Ethiopia) (SWIFT: CBETETAA) தனிப்பட்ட காசோலைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை தயவுசெய்து அவதானிக்கவும். |
விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்வதற்கான அறிவுறுத்தல்கள்
- விண்ணப்பம் ஆங்கிலத்தில் பெரிய எழுத்துக்களில் நிரப்பப்பட வேண்டும்.
- புதிய கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் அடிஸ் அபாபாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு நேரடியாக சமூகமளித்தால் அல்லது கூரியர் சேவை [DHL] மூலம் அனுப்பினால் தூதரக அதிகாரியால் இலவசமாக உறுதிப்படுத்தப்படும்.
- முழு முகமும் இரண்டு காதுகளும் நெற்றியும் தெரியும் வகையில் கடந்த 04 வாரங்களுக்குள் எடுத்த வெள்ளை பின்னணி கொண்ட ஒரேமாதிரியான நான்கு (04) (Size – 3.5cm x 4.5cm) வர்ண புகைப்படங்கள் இணைக்கப்படுதல் வேண்டும். புகைப்படங்கள் தொப்பி, தலைக் கவசம், கண்ணாடிகள் அல்லது ஏனைய முகக் கவசம் இன்றி இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் புகைப்படத்திற்கு நேர் கீழுள்ள இரண்டு கூடுகளுக்குள் கையொப்பமிட வேண்டும். கையொப்பங்கள் கூட்டின் ஓரத்தைத் தொடக்கூடாது என்பதை தயவுசெய்து உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
விண்ணப்பங்களை கூரியர் சேவை [DHL] மூலம் அனுப்புவதற்கான அறிவுறுத்தல்கள்
- விண்ணப்பதாரர் ஒழுங்காகப் பூர்த்திசெய்யப்பட்டÆசான்றுப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தை தேவையான அனைத்து மூல ஆவணங்களுடன் ஒரு தொகுதி போட்டோ பிரதிகளுடன் அனுப்ப வேண்டும்.
- இலங்கை தூதரகத்தின் பெயரில் எழுதப்பட்ட US$ 158.00 10 கூரியர் கட்டணத்துடன் [DHL] தொகைக்கான வங்கி வைப்பு.
குறிப்புகள்:
- தவறான பிரகடனத்துடன் சேர்த்து போலி சான்றிதழ்களை அல்லது ஏனைய போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தல் குற்றமாகும். அத்தகைய விடயங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும்.
- எந்தச் சூழ்நிலையிலும் கட்டணம் மீளச் செலுத்தப்பட மாட்டாது
- நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான கட்டணம் மீளச் செலுத்தப்பட மாட்டாது
கவனிக்கவும்: தபாலில் காணாமற்போகும்/ சேதமடையும் விண்ணப்பங்களுக்கு தூதரகம் பொறுப்பேற்காது.
குடிவரவு திணைக்களத்தினால் விதிக்கப்பட்ட ஏதேனும் கட்டுப்பாடுகளுக்காக கடவுச்சீட்டு மாற்றம் மற்றும் அவதானிப்பு பக்கம் 4, 5, 6 மற்றும் 7 என்பவற்றை விண்ணப்பதாரர்கள் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
கடவுச்சீட்டை/ ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளுவதற்கு விண்ணப்பதாரருக்கு நேரடியாக தூதரகத்திற்கு வர முடியாவிட்டால் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு வேறொரு நபருக்கு எழுத்துமூலம் விண்ணப்பதாரர் அனுமதியளிக்க வேண்டும். ஆவணங்களைப் பெறுவதற்கு வரும் நபர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்துவதோடு தூதரகத்தினால் வழங்கப்பட்ட மூல பற்றுச்சீட்டைச் சமர்ப்பிக்க வேண்டும்.