சமூக ஊடக ஊட்டம்

இலங்கை 1972ஆம் ஆண்டு எதியோப்பியாவுடன் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்தது. இலங்கையின் முதலாவது தூதுவர் 1972ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிஸ் அபாபாவுக்கு நைரோபியில் வதிவிட தூதுவராக நியமிக்கப்பட்டார். இலங்கை தூதரகம் அடிஸ் அபாபாவில் 2017ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 2ஆம் திகதி எதியோப்பியா மற்றும் இலங்கை தூதர்களான, கலாநிதி வோர்னே கெபெயெஹு மற்றும் மங்கள சமரவீர ஆகியோரால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. புதுடில்லியில் உள்ள எதியயோப்பியா தூதரகத்திற்கு தற்பொழுது இலங்கைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அடிஸ் அபாபாவுக்கான முதலாவது இலங்கைத் தூதுவர் சுமித் தசநாயக்க. அவருக்குப் பின்னர் 2019 நவம்பர் மாதம் சுகீஸ்வர குணரத்ன தூதுவராக நியமிக்கப்பட்டார்.

2014ஆம் ஆண்டு அமெரிக்க டொலர் 2.42 மில்லியனாக இருந்த இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2019ஆம் ஆண்டு அமெரிக்க டொலர் 19 மில்லியனாக அதிகரிக்கப்பட்டது. இதில் சுமார் 17 மில்லியன் அமெரிக்க டொலர் எதியோப்பியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதியை உள்ளடக்கியிருந்தது. இதில் பெருமளவு எதியோப்பியாவில் ஆடை உற்பத்திக்கு உள்ளீடு செய்யப்பட்டிருந்தது. இந்த அதிகரிப்பு பிரதானமாக ஹவாசா கைத்தொழில் பூங்காவில் அமைந்திருக்கிற ஆடைக் கைத்தொழிலுக்கு மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளின் காரணமாக நிகழ்ந்துள்ளது.

  • ஹைதராமணி - 2015 ஒக்ரோபர் மாதம் திறக்கப்பட்டது
  • இசபெல்லா - 2016 செப்படம்பர் மாதம் திறக்கப்பட்டது
  • ஹெல ஆடை - 2016 டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது

மேலும் S&D Chemicals (Pvt.) Ltd. என்ற இரசாயன பொருள் உற்பத்தி கம்பெனி எதியோப்பியா, டயர் டாவாவில் அதன் தளத்தைக் கொண்டிருக்கிறது.

2019ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் எதியோப்பியாவில், பிரதானமாக ஆடைக் கைத்தொழிலில் சுமார் 600 இலங்கையர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். ஆனால் கோவிட் - 19 தொற்று காரணமாக அந்த எண்ணிக்கை 400 வரை குறைந்துள்ளது.

எதியோப்பியாவுடன் இலங்கையின் வர்த்தகம் 2009 முதல் 2020

ஆண்டு

ஏற்றுமதி

இறக்குமதி

மொத்த வர்த்தகம்

வர்த்தகத்தின் மீதி

பெறுமதி மில்லியனில் US$

2009

0.76

0.00

0.76

0.76

2010

0.26

0.20

0.46

0.06

2011

2.53

0.01

2.54

2.52

2012

2.54

0.21

2.75

2.33

2013

7.76

0.75

8.51

7.01

2014

1.36

1.06

2.42

0.3

2015

2.11

1.22

3.33

0.89

2016

3.73

0.93

4.66

2.8

2017

9.46

0.61

10.07

8.85

2018

10.07

1.44

11.51

8.63

2019

17.37

1.38

18.75

15.99

2020

36.94

0.60

37.54

36.34

மூலம்: இலங்கை சுங்கம்

இலங்கை பல வருடங்களாக எதியோப்பியாவுடன் சாதகமான வர்த்தக மீதியைக் கொண்டிருந்தது.